Trainee Pastor’s Ordination Teaching & training

பயிற்சி போதகர் ஆர்டினேசனுக்கான இலவச பயிற்சி

கிறிஸ்துவுக்குள் அன்பான ஊழியர்களே, போதகர்களே,


 உங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்தி வரவேற்கிறோம்.
உங்களுடைய ஊழிய வாஞ்சை, தேவனுக்காக பணிபுரிய விரும்புகிற அந்த விருப்பத்தை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.
வருகிற ஜூன் 1-ல் இருந்து பயிற்சிகள் ஆரம்பமாகிறது.
 இந்தப் பயிற்சி நிச்சயமாகவே உங்கள் ஊழியத்திற்கு, தேவராஜ்ய விரிவிற்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கப்போகிறது.
ஆகவே உங்கள் நண்பர்களும் இதில் சேர்ந்தால் மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.
அவர்களும் தேவனுடைய மேய்ப்பு பணியை, ஊழியத்தை சட்டப்படியாக, நேர்த்தியாக, வேத சத்தியத்தின்படி  செய்ய முடியும்.
இதுவரை யாரும் கொடுக்காத அரிய பயிற்சி இது. 
நீங்களும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்களும்  மற்றவர்களை நாங்கள் உருவாக்குவதில் எங்களுக்கு உதவி செய்ய இதை அறிமுகப்படுத்துங்கள்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்து பயிற்சியை நன்றாக பெற வேண்டியது தான்… 

இந்த படிப்பை நாங்கள் எவ்வாறு நடத்துகிறோம்?

1. இதற்கான பாட & Zoom பயிற்சிகள் அனைத்தும் முற்றிலும் இலவசமே.

2. நம் வாட்ஸ் அப் குழுவில் பயிற்சி ஆடியோ பாடங்களை நாங்கள் அனுப்புவோம். நீங்கள் வாய்ப்புள்ள நேரத்தில் கேட்டு குறிப்பு எடுத்து கவனமாக படித்து கொள்ளவேண்டும்.இறுதியில் ஒரு எளிய தேர்வு இருக்கிறது. நீங்கள் கவனமாக கவனித்து வந்தால் எளிதாக தேர்ச்சி பெறலாம்.

3.மாதம் ஒருநாள் அனுபவம் வாய்ந்த போதகரைக் கொண்டு 2 மணி நேர Zoom பயிற்சியும் கொடுப்போம். ஒரு போதகரிடம் நாம் கற்றுகொள்ள வாய்ப்பு.

4. மாதத்தில் ஒரு நாள் சட்ட ஆலோசனை Zoom பயிற்சி: 2 மணி நேர பயிற்சி. ஊழியத்தை/ சபையை ஆரம்பிப்பது எப்படி & அதை சட்டப்படி நிர்வகித்து, ஆவணங்களை பராமரித்து நடத்துவது எப்படி என்பதை பற்றி வழக்கறிஞர் தரும் ஆலோசனைகள்.

5. இப்பயிற்சிக்கு பின்னர் தேவைப்படுவோர்/ விரும்புவோர் ஊழியத்திற்கு பிரதிஷ்டை பண்ணப்பட்டு பயிற்சி போதகர்/ சுவிஷேசகர் [Trainee Pastor /Evangelist etc.,] ஆர்டினேஷனோடு உங்கள் ஊழியங்களை விடுதலையோடு செய்யலாம். இதற்காக பிரதிஷ்டை நிகழ்வில் கலந்து கொள்ளவும், சான்றிதழ் பெறவும் சிறிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கு Diploma in Theology சான்றிதழும் வழங்கப்படும்.

6. ஏற்கனவே B.Th முடித்தவர்கள் போதகர்/ சுவிசேஷகர்/ ரெவரண்ட்/ போன்ற ஆர்டினேஷனோடு ஊழிய பிரதிஷ்டையை பெறலாம். அதற்காக பிரதிஷ்டை நிகழ்வில் கலந்து கொள்ளவும் சான்றிதழை பெறவும் சிறிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கவேண்டும்.

7. ஏற்கனவே B.Th முடிக்காதவர்கள் எங்களிடம் இந்த இலவச பயிற்சியோடு கூட சேர்த்து நம் வேதாகம கல்லூரியில் ரூ185/- மாதக் கட்டணத்தில் B.Thஐ வீட்டிலிருந்தே படித்து எளிய தேர்வெழுதி பின்னர் தங்கள் அழைப்பிற்கேற்ப ஆர்டினேசன் பெறலாம் [விபரமறிய அழைக்கவும்: +91 9080736684]

8. இந்த ஆர்டினேசன் உங்களுடைய ஊழிய அழைப்பு, தகுதி & அனுபவத்தின் அடிப்படையில் கொடுக்கப்படும். தங்கள் ஊழியத்தை விடுதலையோடு செய்யலாம்.

9. இந்த எதிர்ப்பான காலகட்டத்தில் சபை & ஊழிய பதிவிற்கு இந்த அங்கீகாரமான
ஆர்டினேஷன் சான்றிதழ் பெரும் உதவியாக இருக்கும்.

மேய்ப்பு பணி/ ஊழிய பயிற்சிக்கான பாடங்கள்:

1. வேதத்துக்கு சரியான வியாக்கியானமளித்து சிறப்பாக பிரசங்கிப்பது எப்படி?

2. கிறிஸ்தவ ஆளுமை (Personality) பயிற்சி

3. தாலந்துகள் அறிந்து வல்லமை, வரங்களோடே ஊழியம் செய்ய போதனைப் பயிற்சிகள்.

4. மேய்ப்பு பணி பற்றிய வேதாகம உபதேசங்கள்:

அ) மேய்ப்பு பணி என்றால் என்ன?
ஆ) மேய்ப்பு பணிக்கான அழைப்பு எனக்கு இருக்கிறதா?
இ) இந்த ஊழியத்திற்கான ஆயத்தம்.பரிசோதிக்கப்படுதல், திருநிலைப்படுத்தல்(ஆர்டினேஷன்), அதிகாரம் அளிக்கப்படுதல் ஈ) மேய்ப்பன் தன்னை அபிவிருத்தி செய்து கொள்ளுதல் உ) மேய்ப்பனும் தலைமைத்துவமும்
இன்னும் பல உட்பிரிவுகள்


5. Tent makers training (பவுல் சில வேளைகளில் & இடங்களில் கூடாரத்தொழில் செய்துகொண்டு ஊழியம் செய்தது போல் நாமும் வேலையோடு ஊழியம் செய்வது பற்றிய கூடார தொழிற்பயிற்சி)

இந்த பயிற்சியினால் நீங்கள் பெறும் மற்ற வாய்ப்புகள் & பயன்கள்

1.பல ஆயிரம் கொடுத்தாலும் கிடைக்கப்பெறாத அனேக பயிற்சிகளை ஆன்லைனில் நீங்கள் இலவசமாக இப்பயிற்சியின் மூலமாக பெற போகிறீர்கள்.
2.வழக்கறிஞரை கொண்டு சட்டப்பூர்வமாக, பாதுகாப்பான ஊழியத்தை செய்வது பற்றிய பயிற்சி. அரசாங்கத்தில் நமக்கு இருக்கிற சலுகைகளை பற்றி வழக்கறிஞர் சொல்லித் தருவதால் அறிந்து உங்கள்  சபையாருக்கு உதவும் வாய்ப்பு
3. நீங்களே உங்கள் ஊழியத்துக்கு தேவையான  நிதி ஆதாரத்தை [Self supported minister]  உண்டாக்கிக் கொள்ள பயிற்சி
4.ஆவிக்குரிய ரீதியில் சிறந்த போதகராக, ஊழியராக செயல்பட பயிற்சி
5. விரும்புகிற சபையாருக்கு இந்த பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் சுயதொழில் செய்வதற்கு பயிற்சியும் சான்றிதழும் வழங்கப்படும்.இதனால் உங்கள் சபையில் பொருளாதார வளர்ச்சி எற்பட வாய்ப்பு.
6.நம்மிடத்திலேயே ஆன்லைனில் வேதாகமக் கல்லூரி உள்ளது.கிடைக்கும் சமயத்துக்கு தக்கதாக ஆடியோ பாடங்களை கேட்டு வீட்டிலிருந்தே படித்து, வீட்டிலிருந்தே தேர்வு எழுதும் வேதாகமக் கல்லூரி பயிலும் வாய்ப்பு.B.Th- ரூ 185 மட்டுமே மாதக் கட்டணம். இதிலேயே எல்லா கட்டணமும் அடங்கும்.
இதை முடித்த பிறகு நீங்கள் போதகர்/ சுவிசேஷகர்/ ரெவரண்ட் போன்ற ஆர்டிநேசனை நீங்கள் விரும்பினால் எங்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.நீங்கள் விரும்பியபடி விடுதலையோடு உங்கள் ஊழியத்தை செய்யலாம்.
7. நீங்கள் அடிப்படை சட்ட பயிற்சியை படித்து முடித்த படியினால்  ஆறாவது மாதத்தில் அதற்கும் ஷாலோம் மிஷன் – மனித உரிமைகள் மேம்பாட்டுக் கழகம் ( Regd) வழங்கும் அங்கீகாரமான சான்றிதழ் பெறும் வாய்ப்பு.
8.இந்த எதிர்ப்பான காலகட்டத்தில் உங்களையும், சபையையும், ஊழியத்தையும் பாதுகாப்பாய் நடத்திச் செல்லவும், தைரியமாய் ஊழியம் செய்யவும் இந்த மனித உரிமைகள் கழக சான்றிதழ் மற்றும் ஐடி கார்டு உங்களுக்கு உதவியாய் இருக்கும்.

 

Design a site like this with WordPress.com
Get started